சென்னையில் விபத்துக்குள்ளான சிவகார்த்திகேயன் கார்!
சென்னை மத்திய கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் கார் முன்னாள் சென்ற பெண் ஒருவரின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை மத்திய கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் கார் சென்றுகொண்டு இருந்தது அப்பொழுது மத்திய கைலாஷ் அருக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சிவகார்த்திகேயன் கார் முன்னாள் ஓட்டிச் சென்ற வட இந்திய பெண் ஒருவரின் காரின் மீது மோதியுள்ளது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனினும் முன்னாள் சென்ற பெண்ணின் காரில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காரில் இருந்த நபர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் கார் வட இந்திய பெண்மணி ஒட்டி சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதை எடுத்து அந்த இடத்தில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்தின் அருகே இருந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடனடியாக விரைந்து வந்து விபத்து குறித்து கேட்டறிந்தனர் பின்பு இரு தரப்பினரிடம் பேசி அந்த இடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். மத்திய கைலாஷ் பகுதி கோட்டூர்புரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் எல்லைக்கு உட்பட்ட காரணத்தால் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர்புரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


