3வது குழந்தை பிறந்திருக்கிறது - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு

 
sivakarthi-3

தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமாக இருந்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும் , குகன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு மீண்டும் குழந்தை பிறந்துள்ளது.


இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நன்றி” எனக் கூறியுள்ளார்.