"ஒரு அரசு அதிகாரியின் மகனான எனக்கு இந்த நிகழ்வு மறக்க முடியாதது"- சிவகார்த்திகேயன்
தங்களின் நேரத்தை ஒதுக்கி அமரன் திரைப்படத்தை பார்த்து எங்கள் அனைவரின் உழைப்பையும், பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மறைந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, வழக்கமான தனது உடல் மொழியை மாற்றி ராணுவ வீரராகவே பல்வேறு கட்ட பயிற்சிகளை எடுத்து முகுந்து வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி இதில் நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் டீசர் ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தங்களின் நேரத்தை ஒதுக்கி அமரன் திரைப்படத்தை பார்த்து எங்கள் அனைவரின் உழைப்பையும், பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஒரு அரசு அதிகாரியின் மகனான எனக்கு இந்த நிகழ்வு மறக்க முடியாதது என்றும அவர் கூறியுள்ளார்.