சிவகிரி இரட்டை கொலை வழக்கு - சிபிசிஐடி.க்கு மாற்றம்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியினர் படுகொலை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகிரி அருகே விளக்கேத்தி மேக்கரையான் தோட்டத்தில் ராமசாமி- பாக்கியம் வயது முதிர்ந்த தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஏப்ரல் 28.ம் தேதி படுகொலை செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டிலிருந்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது வீட்டிலிருந்த 10.5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், இது தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் அரச்சலூரை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ் மாதேஷ் மற்றும் ஞானசேகரன் ஆகிய நான்கு குற்றவாளிகளையும் மே 19.ம் தேதி போலீசார் கைது செய்தனர் இதில் கைதான ஞானசேகரன் தவிர எஞ்சிய மூன்று பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதால், சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் இவர்களை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இதேபோல மேலும் சில வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அவிநாசி பாளையம் கொலை வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் இருப்பதால், சிவகிரி இரட்டை கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸ்க்கு சிபிசிஐடிக்கு மாற்றி DGP உத்தரவிட்டுள்ளார்.


