உயிரிழந்த செவிலியர் மாணவியின் சகோதரிக்கு தற்காலிக அரசு வேலை
திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த செவிலியர் மாணவியின் சகோதரிக்கு தற்காலிக அரசு பணிக்கான ஆணையும் மாணவியின் தாயார் பெயரில் இலவச வீட்டு மனை பட்டாவும் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மணக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு கலைச்செல்வி ஆகியவர்களுக்கு புவனேஸ்வரி சீதாலட்சுமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் விறகு வெட்டி பணி செய்யும் கூலி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் புவனேஸ்வரி டிப்ளமோ நர்சிங் படிப்பை முடித்த நிலையில் அவரை களமாவூர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இரண்டாவது மகளான சீதாலட்சுமி திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் அவரது மூக்கில் சதை வளர்ந்திருந்ததை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்ய திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அறுவை சிகிச்சை என்பது பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சைகள்தான் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி பெற்றோர் உறவினர்கள் மற்றும் அவருடன் பயிலும் சக மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர். மேலும் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவியின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவர்களுக்கு புதிய நிவாரணம் வழங்க வேண்டும் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். சுமார் பத்து மணி நேரம் போராட்டம் தொடர்ந்து நிலையில் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாக இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட மாணவி சீதாலட்சுமியின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நான்கு அரசு பேருந்துகளில் அவருடன் பயிலும் சக மாணவிகள் 200 பேர் வருகை தந்து மயானத்திற்கு சென்று மாணவியின் சடலத்தை பார்த்து கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது பெற்றோர் உறவினர் மட்டுமின்றி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பின்னர் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதன் பின்னர் அஞ்சலி செலுத்திய மாணவிகள் பேருந்தில் கிளம்பிய போது உன்னை இங்கேயே விட்டுவிட்டு செல்ல வா வந்தோம் என்று கூறி பேருந்து அதிர கதறி அழுதது பார்ப்பவர்களையும் சோகத்தில் மூழ்கடித்தது. இந்நிலையில் தான் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரியான செல்லமுத்து மனைவி புவனேஸ்வரி டிப்ளமோ நர்சிங் படித்துள்ள நிலையில் அவருக்கு தற்காலிக பணிக்கான ஆணையையும் சீதாலட்சுமி தாயார் கலைச்செல்வி பெயரில் இலவச வீட்டு மனை பட்டாவையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆகியோர் வழங்கி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அமைச்சர் முகமது பர்வேஸிடம் மாணவியின் உறவினர்கள் மாணவி எதனால் உயிரிழந்தார் என்பதை வெளிப்படையாக ஏன் சொல்லவில்லை என்றும் இதுபோல் ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு இனி நடைபெறக்கூடாது அதேபோல் மாணவிக்காக போராடிய சக செவிலியர் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் முழுமையாக விசாரணை செய்து தவறு நடந்திருந்தால் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பார்வை தெரிவித்தார்.

