#BREAKING தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் நீக்கம்

 
ச் ச்

தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “தமிழ்நாட்டில் மொத்த 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண் வாக்காளர்கள்- 2,77,60,332; ஆண் வாக்காளர்கள்-2,66,63,233,; மூன்றாம் பாலியம் 7,191 பேர் உள்ளனர்.  தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு பின் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இறந்த வாக்காளர்கள்- 26,94,672 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் - 66,44,881 பேரும், இரட்டை பதிவுகள்,- 3,39,278 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதாவது 15.18 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.