சென்னையில் S.I.R உதவி மையங்கள் நாளை முதல் நவ.25 வரை செயல்படும்
சென்னையில் S.I.R உதவி மையங்கள் நாளை முதல் நவ.25 வரை செயல்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் வீடு, வீடாக சென்று படிவம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் S.I.R உதவி மையங்கள் நாளை முதல் நவ.25 வரை செயல்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். SIR படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறலாம். கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி மூலம் வாக்காளர் விவரங்களை சரிபார்த்து வழங்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


