பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்! அடுத்த மாதம் டெண்டர்

 
பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்! அடுத்த மாதம் டெண்டர்

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறைக்கு ஜூன் மாதம் டெண்டர் விடப்படவுள்ளது.


சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் ரயிகள் மற்றும் பேருந்துகள் அனைத்திற்கும் பொதுவான டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறைக்கு ஜூன் மாதம் டெண்டர் விடப்படவுள்ளது. இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (CUMTA) டிக்கெட்டுக்கான செயலியை உருவாக்க டெண்டர் விடப்படவுள்ளது. ஜூன் மாதம் டெண்டரை ஒப்படைக்கும் பட்சத்தில் டிசம்பரில் முதற்கட்டமாக திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.