“ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..”- பாடலை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார்
Jan 9, 2025, 22:04 IST1736440444799
பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.
பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன்(80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் காலமானார். தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார். 1997 ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
தமிழில் புதுமைப் பெண், வைதேகி காத்திருந்நாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தராிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.