பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம்

 
tn

பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

tn

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும்,  பாடகியுமான  பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

tn

ஏற்கனவே இளையராஜாவின் பண்ணை வீட்டில்  அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டு  மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது.