“Very inspiring... தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான விஜயின் ஆர்வம்”- நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

 
ச்

நடிகை சிம்ரன், தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். 

Image


இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகை சிம்ரன், “பல வருடங்கள் ஒன்றாகத் திரையில் இணைந்து பணியாற்றிய பிறகு மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்தார். பலரையும் அவர்பால் ஈர்த்த அவரது அன்பு, பணிவு மற்றும் நேர்மை ஆகியவை அப்படியே இருக்கின்றன. நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பேரார்வமும் தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிக்கின்றன. அவர் தமிழகத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.