ஜனநாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா- நடிகர் சிம்பு

 
s s

ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு நடிகர் சிலம்பரசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Vijay is my brother by another Mother - Simbu | Vaalu Release

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தணிக்கை சான்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கில், ஜனவரி 9ம் தேதி காலைக்குள் தீர்ப்பு என்பதால் பட வெளியீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில், “விஜய் அண்ணா, முட்டௌக்கட்டைகள் உங்கள் ஓட்டத்தை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிட பெரிய புயல்களை எல்லாம் நீங்கள் கடந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளில் தான் உண்மையான திருவிழா தொடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.