சிம்பு, கமல், தனுஷ், விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு

 
கமல்

நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு,  விஷால் ஆகியோரின் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு (Red Card) வழங்குவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சிம்பு தனுஷ் விவகாரத்தால் விஷாலுக்கு பின்னடைவு

தமிழ் திரையுலகில் சில முன்னணி ஹீரோக்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு சொன்னபடி கால்ஷீட் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாக பல புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த ஹீரோக்களுக்கு ரெட் கார்டு வழங்க  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விஷால் ஆகியோரின் படங்களுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் தரப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


உத்தமவில்லன் நஷ்டத்திற்கு ஈடுகட்டும் வகையில் ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியை கமல்ஹாசன் இன்றுவரை நிறைவேற்றவில்லை. அதேபோல், 
கொரோனா குமார் படம் தொடர்பாக சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் கூறி இருந்தார். தனுஷ் மீது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் புகார் கூறி இருந்தது குறிப்பிடதக்கது.