புதிய உச்சத்தில் வெள்ளி விலை... கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு..!

 
1 1

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோன்று வெள்ளி விலையும் கிலோ ரூ.2½ லட்சத்தை கடந்துள்ளது.

தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 890-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9-ம், கிலோ ரூ.9 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.254-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.52 ஆயிரம் அதிகரித்து உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒருகிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இரு பொருளும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது.