ஒரே நாளில் உச்சம் தொட்ட வெள்ளி விலை..!!
Dec 3, 2025, 09:36 IST1764734788785
இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகளவில் செய்யும் முதலீடே தங்கத்தில் தான். ஏதாவது அவசர தேவையென்றால் உடனடியாக பணம் புரட்டுவதற்கு தங்கம் மட்டுமே கைகொடுத்து வருகிறது. மருத்துவமனை செலவு, பள்ளிகள், கல்லூரிகளுக்கான கட்டணம் என்று பெரும்பாலும் சாமானிய மக்கள் தங்கம் மூலமாக பணத்தை திரட்டி உடனடியாக கட்டி வருகின்றனர்.இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது சாமானிய மக்களை பாதிக்க தொடங்கி இருக்கிறது.
இன்று (டிச. 3), சென்னையில் 22K தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.12,060க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.96, 480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.201க்கும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து, ரூ,2,01,000க்கு விற்பனையாகிறது.

