தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு - வெளியானது அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
காவல்துறை பணியில் சேர்வது என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. தமிழக காவல்துறையை பொறுத்தவரையில் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 - 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.36,900 - ரூ.1,16,600 ஊதியமாக வழங்கப்படும். இணைய வழி விண்ணப்பம் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. மே 3 விண்ணப்பிக்க கடைசி நாள். www.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.