"CM விஜய் மிகவும் எளிமையானவர்"- நடிகை ஸ்ரேயா பேட்டி

 
"CM விஜய் மிகவும் எளிமையானவர்"- நடிகை ஸ்ரேயா பேட்டி

CM விஜய் மிகவும் எளிமையானவர். அவரின்  பயணம் ஒரு புதிய தொடக்கம், அவர்   முதல்வரானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.


நெல்லை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஸ்ரேயா சரண், “தமிழக முதலமைச்சர் விஜய் மிகவும் சிறப்பான பணியை செய்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எளிமையாக இயல்பாக மக்களுக்கு தேவையானவை என்ன என்பதை நேரடியாக தொடர்பு கொண்டு செய்து வருகிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென மிகவும் ஆர்வமாக செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் காலங்களிலும் அவருடைய பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும். CM விஜய் மிகவும் எளிமையானவர். அவரின்  பயணம் ஒரு புதிய தொடக்கம், அவர்   முதல்வரானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், விஜய் தனது நட்சத்திர அந்தஸ்தை தாண்டி எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கிறார். மக்களுக்கு தேவையான விஷயங்களை நேரடியாக அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். அவரது எதிர்கால பயணம் மிக சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.