அம்மா சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!!

 

அம்மா சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!!

ஊரடங்கு காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை குறையாமல் அதிகரிப்பது வினோதம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 20% முதல் 30% வரை உயர்ந்துள்ளது. ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டன் ஸ்டீல் கம்பி ரூ.68,000 ரூபாயிலிருந்து ரூ.75,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் மணல் , ஜல்லி விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசு விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அம்மா சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க வேண்டும் : அன்புமணி கோரிக்கை!!

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ” தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த சில நாட்களில் மூட்டை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது நியாயமற்றது. இது கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும்!

ஊரடங்கு காரணமாகவே சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுவது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைபடவில்லை; தேவை குறைந்துள்ளது. அத்தகைய சூழலில் விலை குறையாமல் அதிகரிப்பது வினோதம்!

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.