கோவை குண்டுவெடிப்பு கைதிகளை சுதந்திரமாக உலவ விடுவதா? - தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
பாஜக மூத்த தலைவர்களின் ஒருவரான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்,
கோவை குண்டுவெடிப்பு கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மக்களுக்குப் பதிலளித்தே ஆக வேண்டும்!
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அனுபவித்த துயரத்தையும், பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும் தவெக அரசு மறந்துவிட்டு கைதிகளை 60 நாட்களுக்கு வெளியில் சுதந்திரமாக உலவ விடுவது மிககண்டனத்திற்குரியது.
யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டது? என்ன காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை சிறைத்துறை அமைச்சர் விளக்க வேண்டும். இது போன்ற முடிவுகள் சட்டத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பது போலவும், பொது அமைதிக்கு மீண்டும் பங்கம் ஏற்படுத்துவது போலவும் அமையும் என்பது இந்த அரசுக்கு தெரியாதா?
மக்களின் பாதுகாப்பு மற்றும் நீதியின் மீதான நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அதை விடுத்தது குற்றவாளிகளை வெளியில் சுதந்திரமாக உலவ விடுவது தண்டனையின் நோக்கத்தையே சிதைக்கும். எனவே தமிழக அரசின் சிறைத்துறை இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

