பாஜக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு! போலீசார் அதிரடி

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி செல்வகுமார், சிவகங்கை -இளையான்குடி சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது, காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.