ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடல்

 
கடையடைப்பு

பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்பட்டன.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வரும் 20-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். 

அதன்படி தற்பொழுது பிரதமர் பயணிக்கும் சாலை மற்றும் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் கடைகள் அனைத்தும் தற்பொழுது அடைக்கத் தொடங்கினர். இன்றும் நாளையும் விடுமுறை என பேப்பரில் எழுதி கடைக்கு முன்பாக ஓட்டினர். இன்று மாலை முதல் சனிக்கிழமை மதியம் வரை அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.