திரைப்படங்கள், சீரியல்கள் உள்ளிட்ட படப்பிடிப்புகள் நாளை முதல் ரத்து- தென்னிந்திய அவுட்டோர் யூனிட்டின் அதிரடி அறிவிப்பு

தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் சென்னையில் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாளை முதல் சென்னையில் நடைபெறும் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரம் மற்றும் இணையத் தொடர் உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தென்னிந்திய அவுட்டோர் யூனிட் செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர். தங்கள் அமைப்பில் உள்ள சில நிறுவனங்களுக்கு பெப்சி அமைப்பு லைட் மேன்களை அனுப்பவில்லை என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் புகார் கூறியுள்ளது. FEFSI யூனியன் உடன் சுமூக தீர்வு காணும் வரை சென்னையில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஒனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் படப்பிடிப்புகள் நடைபெறும். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு நாளை முதல் அவுட்டோர் யூனிட்டுகள் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாக அங்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் மார்க்கஸ் கூறியுள்ளார்.