ஊட்டியில் நாளை முதல் திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை!

 
ooty

உதகையில் உள்ள பூங்காகளில் நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் குளிர் பிரதேசங்களை தேடி செல்கின்றனர். இதேபோல் பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் குழைந்தகளுக்கு 2 மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சினிமா சூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காட்சிகளை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதால் அங்குள்ள பூங்காகளில் நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது