ரூ.6 கோடிக்கு மேல் வாடகை பாக்கி- மாநகராட்சி கடைகளுக்கு சீல்

 
shop seal

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத பல்வேறு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 101 கடைகள் உள்ளன. இதில், லட்சக்கணக்கில் வாடகை பாக்கி நிலுவையில்  பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகளில் மட்டும் சுமார் ரூ. 6 கோடிக்கு மேல் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. அந்த கடைகளுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சுதா உத்தரவின் பேரில் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும்,  பல்வேறு கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து  வைத்துள்ளனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அப்போது  வெற்றிலை, பாக்கு கடை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.