பதைபதைக்கும் வீடியோ! ஏர் கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதும் வீடியோ வெளியானது..!
ஏர் கனடா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் CRJ-900 விமானம், கனடாவின் மாண்ட்ரியல் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் (மார்ச் 22) சென்றது. சரியாக இரவு 11.42 மணியளவில் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறக்கும்போது, ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்த தீயணைப்பு வாகனம் மீது விமானம் பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
ஏர் கனடா எக்ஸ்பிரஸ் அளித்த தகவலின்படி, அந்த விமானத்தில் 72 பயணிகளுடன், 4 ஊழியர்கள் இருந்துள்ளனர். மேலும், தீயணைப்பு வாகனத்திலும் ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக, விமானம் மோதியதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், சிலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த நியூயார்க் தீயணைப்பு துறை ஊழியர்கள், மீட்புப் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஏர் கனடா எக்ஸ்பிரஸ், விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்ததுடன், அடுத்தக்கட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:
ஏர் கனடா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான சி.ஆர்.ஜே-900 ரக விமானம், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.37 மணியளவில் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது ஓடுதளம் 4-ல் சுமார் 24 மைல் வேகத்தில் அந்த விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் விமானத்தை இயக்கிய முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு காவலர் ஆகிய இருவருக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் 72 பயணிகளும் உயிர்தப்பினர்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது விமானம் நேராக வந்து தீயணைப்பு மீது மோதும் பயங்கர வீடியோ இதோ
WATCH: New video shows Air Canada flight crashing into rescue truck at New York airport pic.twitter.com/PZcyTSXI15
— BNO News (@BNONews) March 23, 2026

