பதைபதைக்கும் வீடியோ..! பனாமாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

 
1

பனாமாவின் தெற்கு கடலோரப் பகுதியான ஹெர்ரேரா மாகாணத்தின் லா பிடலோசா அருகே, பூமிக்கு அடியில் சுமார் 12.6 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் கொண்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் பனாமா சிட்டி உள்ளிட்ட நாடு முழுவதும் இந்த அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ​இதன் எதிரொலியாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ​தலைநகரில் மெட்ரோ ரயில் சேவை முடக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ​

நாட்டின் பல இடங்களிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 203 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வர்த்தக வழித்தடமான பனாமா கால்வாய், எவ்வித பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தை அடுத்து பனாமா, கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் அந்த எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றது. உயிரிழப்புகள், சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.