பதைபதைக்கும் வீடியோ..! நாசிக் மருத்துவமனையில் பயங்கரம்: லிஃப்டில் தலை சிக்கி ஊழியர் படுகாயம்..!
நாசிக்கில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில், லிஃப்டில் தலை சிக்கியதில் 50 வயதான ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
அறுவை சிகிச்சைத் துறையில் பணிபுரிந்து வந்த ஜோதி சிவாஜி அஹிரே என்ற பெண், அறுவை சிகிச்சை உபகரணங்களை கொண்டு செல்லப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சரக்கு மின்தூக்கியில் சாய்ந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அது திடீரென நகர்ந்தபோது, அவரது தலை சிக்கி, உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டன.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், மற்றொரு ஊழியர் இந்த அசம்பாவிதத்தைக் கவனித்து மற்றவர்களை எச்சரிப்பதும், அதைத் தொடர்ந்து ஒரு குழு ஒன்று கூடி அவரைக் காப்பாற்றுவதும் பதிவாகியிருந்தது. இருப்பினும், அவர்களால் உடனடியாக அவரது தலையை விடுவிக்க முடியவில்லை.முதுகெலும்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிக்குக் கொண்டு செல்லப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த அரசு மின் பொறியாளர், டிராலியில் இயந்திரக் கோளாறு அல்லது சரிவு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் பாதுகாப்புத் தடைகளைத் தாண்டி, தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி டிராலியின் பாதையில் சாய்ந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
#NashikTragedy | Woman Injured In Nashik Medical College Lift Mishap Dies During Treatment; CCTV Footage Goes Viral
— Free Press Journal (@fpjindia) April 28, 2026
🔗 https://t.co/RdOCTtjLY2#Nashi | #NashikNews | #FPJ pic.twitter.com/cd749F4r2e

