அதிர்ச்சி வீடியோ..!! படப்பிடிப்பில் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி..!!

 
Q

நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடித்து வரும் 'குன்மாஸ்டர் ஜி9' (Gunmaaster G9) திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது, ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பான ஒரு பின்னணி (BTS) வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காட்சியில், கிரேனில் கட்டப்பட்டு நடுவானில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த ஒரு எஸ்யூவி (SUV) கார், திடீரென தலைகீழாகக் கவிழ்ந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கருப்பு நிற வேனின் மீது பயங்கரமாக மோதுகிறது. இந்த விபத்து நடந்த விதம், அருகில் இருந்த நடிகை மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆதித்யா தத் இயக்கத்தில், இம்ரான் ஹாஷ்மி, ஜெனிலியா தேஷ்முக், அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் சிங் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், வருகிற நவம்பர் 27, 2026 அன்று உலகளாவிய திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இம்ரான் ஹாஷ்மி 'ஈஸ்வர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.