நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்

மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பமாக தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே மரணத்துக்கு காரணம் என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மரணத்தை கலாபவன் மணியே தேடிக்கொண்டதாகவும் விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
மரணம் நடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதியும், கலாபவன் மணி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார். அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.