அதிர்ச்சி திருப்பம்! இன்று தங்கம் விலை மட்டுமல்ல... வெள்ளி விலையைப் பார்த்தா தலைசுற்றி போயிடுவீங்க!
தங்கம் விலை நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாக, அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களிலேயே சவரனுக்கு ரூ. 2,200 அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அடுத்த நாளும் சவரனுக்கு ரூ. 2,280 அதிகரித்தது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கு கீழே செல்லும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் 4 நாட்களில் சவரனுக்கு ரூ. 5,240 அதிகரித்தது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டிய நிலையில் அமெரிக்க டாலர் மதிப்பு சரியத் தொடங்கியதால், தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்காலிகமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தங்கம் விலை சட்டென ஏறியது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.245 குறைந்து ரூ.13,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ரூ.1,05,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.13,160-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,05,280-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.250-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.45,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

