காலையில் வந்த அதிர்ச்சி செய்தி..! சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிரடி உயர்வு.. எவ்வளவு கூடியது?
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி சுங்கக் கட்டணம் திருத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்தன.
அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படாத மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது ஆண்டுக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண விகிதங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
தற்போது 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பயணிக்கும் முன் தங்களது வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிக்கான தற்போதைய கட்டண விவரங்களை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கான சுங்கக் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டு, நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக விக்கிரவாண்டியில் கார் கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி, சமயபுரம், மதுரை, செங்குறிச்சி, வாலஜாபாத் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்ந்து இருப்பதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

