மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அக்டோபர் முதல் விலை உயர்வு
டாஸ்மாக் மதுபாட்டில் விலை உயருகிறது. அக்டோபர் முதல் ரூ.10 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மதுபான பாட்டில்களின் விலையை அரசு தரப்பில் ரூ.10 வரை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காலி மதுபாட்டில்களை சேகரித்து மறுசுழற்சி செய்வது, அவற்றை அகற்றுவது மற்றும் போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்துக்கான தீர்வை உயர்த்தும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் மாதம் முதல் மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. காலி பாட்டிலை திருப்பி வழங்கும் முறையில், அந்த தொகையை மீண்டும் வழங்கும் நடைமுறையும் தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில மதுபான வகைகளின் விலை ரூ.10 வரை உயரவும், பிரீமியம் வகை மதுபானங்கள் மற்றும் பீர் விலையிலும் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

