இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! 4 நாட்களில் சவரனுக்கு ரூ.5240 அதிகரிப்பு..!!

 
Gold

நம் நாட்டில், கடந்த வாரத்தில் குறைந்து வந்த தங்கம் விலை, சில தினங்களாக உயர்ந்து வருகிறது.

கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 02) தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 12,775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 200 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செவ்வாய் கிழமை (நவம்பர் 03)தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

நேற்று (நவம்பர் 04) தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 12,825 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.மீண்டும் மதியம் தங்கம் விலை சவரனுக்கு 2,200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் கிராமுக்கு 275 ரூபாய் அதிகரித்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 210 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்று (நவம்பர் 05) தங்கம் விலை சவரனுக்கு 2280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 285 ரூபாய் அதிகரித்து 13,385 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 5,240 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 210 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி நெருங்கும் நிலையில், இறங்குமுகத்தில் இருந்த தங்கம், வெள்ளி விலை, ஏறுமுகத்துக்கு திரும்பியுள்ளது.