அதிர்ச்சி தகவல்! வங்கக்கடலில் உருவானது பயங்கரப் புயல்.. தமிழகத்தை மிரட்டப் போகும் கனமழை!

 
Q

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை;

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது அக்.,26ம் தேதி புயலாக மாறக் கூடும். இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தற்போது, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.