அதிர்ச்சி செய்தி..! பொதுத்தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்..!

 
1

தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்விற்கே வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியானதும், துணை தேர்வு தேதி அறிவிக்கப்படும். 

இதையடுத்து எதிர்கட்சியினர்  இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல அரசு பள்ளிகள் காலாவதி ஆகின்ற நிலையில் தான் உள்ளது. சமீபத்தில் மழை பெய்ததால் பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. இன்னும் சில பள்ளிகளில் கூரையிலிருந்து மழை ஒழுகியதால் மாணவர்கள் தங்கள்  சாப்பிடும் தட்டுகளை தலைமேல் வைத்து பாடம் படிக்கின்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கும்போது நம் நெஞ்சானது பதைபதைக்கிறது. இதை எல்லாம் பார்க்கும்போது நம் தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த திராவிட ஆட்சியில் என்றுதான் கேள்வி எழுகிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.