உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்- விஜய் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் ரகசிய திட்டமா?

 
கோயில் சொத்துகள் மீட்பு - முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டமிடுவதாக உளவுத்துறை மூலம் முதல்வர் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளிடம் விஜய் ஒரு கோரிக்கையை வைத்துள்ளதாகவும், அதற்காக டெல்லியில் ஆதவ் அர்ஜுனா நடத்திய பேச்சுவார்த்தை குறித்த பிரத்யேக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

டெல்லியில் சிபிஐ, சிபிஎம் தலைவர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா! | Aadhav Arjuna  Meets CPI and CPM Leaders in Delhi

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே விஜய் தலைமையில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, தனிச்செயலாளர் ஜெகதீஸ், அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் தேசிய தலைவர்களை சந்தித்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தான் விஜய்க்கு முன்பே ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்று தேசிய தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

இடதுசாரி தலைவர்களிடம் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, தவெக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முரண்பட்ட ஒரு கூட்டணியை ரகசியமாக வைத்திருப்பதாகவும், ஆட்சியை கவிழ்ப்பது தான் அவர்களின் திட்டம் என்றும், இது குறித்து உறுதியான ரிப்போர்ட்டை தமிழக உளவுத்துறை முதல்வர் விஜய்யிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளின் மறைமுக திட்டத்துக்கு ஒத்துழைப்பது போல தமிழக இடதுசாரி தலைவர்களின் கருத்துக்கள் இருப்பதாகவும், அதே தொணியில் பத்திரிகைகளுக்கும் பேட்டியளிப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது. அத்தகைய பேட்டிகள் தவெக அரசுக்கு இடதுசாரிகள் கொடுத்து வரும் ஆதரவு குறித்து சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், அதனால் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதை குறைத்துக்கொள்ள தமிழக மாநில செயலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை ஆதரிக்க கூடாது என்றும், ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் விரும்புவதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாக தவெக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.