தவெகவினர் ஷாக்..!!த.வெ.க., வேட்பாளரிடம் மக்கள் சரமாரி கேள்வி..!!
குண்டடம், பெரியகுமாரபாளையத்தில் வேட்பாளர் சத்யபாமா நேற்று, பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் சிலர், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதில் ஒருவர், 'நீங்கள், 50 கோடி ரூபாய் வாங்கி கொண்டு, த.வெ.க., சென்றுள்ளீர்கள். அதற்கு ஆதாரம் அளிக்க வேண்டும்' என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வேட்பாளர் சத்யபாமா, 'தான் எந்தப் பணமும் வாங்கவில்லை என, தெரிவித்து, தன் குழந்தைகள் மீது சத்தியம் செய்தார்.
இருப்பினும், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
அதன்பின், சத்யபாமா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், மடத்துப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில், சத்யபாமாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'தாராபுரம் மக்களின் கேள்வி, ஏன் இந்த ராஜினாமா? யார் சொல்லி இந்த துரோகம்? வெற்றி பெற்ற பின், தாராபுரம் மக்களை ஏன் கைவிட்டீர்கள் சத்யபாமா?' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

