நகைப்பிரியர்கள் ஷாக்..!! ஒரே நாளில் ரூ.1680 உயர்ந்த தங்கம் விலை..!!

 
Gold

மேற்காசிய போர் காரணத்தினால் கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்தது. அதன் காரணத்தினால் தங்கம் விலை சர்வதேச சந்தையின் படிப்படியாக குறைந்து வந்தது.

ஜூன் மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் மீண்டும் தங்கல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தங்கத்தின் விலை நிச்சயமற்ற நிலையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக காலை, மாலை என இரு வேளையும் தங்கத்தின் விலை மாற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.13,500 கீழ் இருந்து வருகிறது.

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 22) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,680 உயர்ந்து, ரூ.1,07,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது