தவெக-வினர் ஷாக்..! 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சேலம் தவெக நிர்வாகி..!
தவெக பிரமுகர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் வீரபாண்டி பகுதி தவெக நிர்வாகி மணிகண்டன் மீது 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகப் பரபரப்பு பாலியல் புகார் எழுந்துள்ளது. வறுமையில் வாடும் பெண்களைக் குறிவைத்து மிரட்டியதுடன், அவர்களைத் தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்க வைத்து விபச்சாரத்தில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கைப்பற்றப்பட்ட அவரது செல்போனில் இருந்த வீடியோக்களை போலீசாரே அழித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
குற்றத்தின் பின்னணி :
சேலத்தை அடுத்த நெய்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தவெக மணிகண்டன் மீது சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு அதிரடி புகார் மனுவை அனுப்பியிருந்தனர்.
அந்த மனுவில், மணிகண்டன் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திக்கொண்டே, பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் குட்கா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை ரகசியமாக விற்று வருகிறார். ஏற்கனவே இவர் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் இருக்கும் நிலையிலும், தொடர்ந்து இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதோடு நிறுத்தாமல், பல பெண்களை ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்துக் கொண்டு, அதைத் தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி மிரட்டி வருகிறார்".
பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் ஆடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்தது.அதில் அவர் பேசியதாவது
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண், வட்டிப் பணக் கொடுமையால் சேலம் பால்மார்க்கெட் பகுதியில் டூவீலரில் நின்றபடி அழுதுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், ஆறுதல் சொல்வது போல நடித்து, பைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தருவதாக சொல்லி, அந்தப் பெண்ணின் போன் நம்பரை வாங்கியுள்ளார். அதற்கு பிறகு எந்நேரேமும் வாட்ஸ்அப் காலில் பேசி வந்த மணிகண்டன், அந்தப் பெண்ணை ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பழகியுள்ளார்.ஒருமுறை ஓமலூர் ரூமில் மணிகண்டன் பாத்ரூம் சென்றபோது, அவரது போனை எடுத்துப் பார்த்த அந்தப் பெண் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனாராம்.. காரணம், அந்தப் போனில் சுமார் 8000 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அதில் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் மணிகண்டன் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதும், உடலுறவு கொண்ட வீடியோக்களும் இருந்ததைக் கண்டு பயந்துபோன அந்தப் பெண், அவரிடமிருந்து உடனடியாக விலகியுள்ளார். ஆனாலும் மணிகண்டன் அந்தப் பெண்ணை சும்மா விடவில்லை. கடந்த சில நாட்களாக மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு, பழையபடி தன்னிடம் பழக வேண்டும் என்றும், இல்லையென்றால் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தன்னிடம் பழகியது போலத் தனது நண்பர்களுடனும் பழக வேண்டும் என்று கூறி விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னைப்போல பல பெண்கள் இவனால் சீரழிந்துள்ளதாக அந்தப் பெண் ஆடியோவில் கதறியிருந்தார். இந்த ஆடியோ ஆதாரம் வைரலான உடனே, சேலம் மாநகர கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அதிரடியாகக் களம் இறங்கினார்கள்.. மணிகண்டனின் வீட்டைச் சுற்றி வளைத்து அவரை பிடித்து, ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையும் நடத்தினார்கள்.அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது, 3 பெண்களுடன் அவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசுவது போன்ற வீடியோவும் சிக்கின.. . இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் புகாரைப் பெற்று, மணிகண்டனை இரவோடு இரவாக கைது செய்த போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.

