தவெக-வினர் ஷாக்..! சிறுமிக்கு பாலியல் தொல்லை - தவெக பிரமுகர் கைது..!!
May 25, 2026, 06:05 IST1779669348000
மதுரையை சேர்ந்தவர் கண்ணன். தவெக கட்சி பிரமுகராகவும் அறியப்படும் இவர், இந்த சம்பவதன்று நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர் திடுக்கிட்டு எழுந்தபோது அங்கிருந்து கண்ணன் தப்பி சென்றதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வனிதாமணி மற்றும் மகளிர் போலீசார் கண்ணனை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

