தவெக-வினர் ஷாக்..! தவெக மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்..!

 
1

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.


தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகாத முறையில் பேசுவதாக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் முழங்கங்களை எழுப்பி வருகின்றனர். தனக்கு ஆதரவாகவும், அனுசரித்து செல்பவர்களுக்கும் மட்டுமே கட்சியில் சத்யா பதவி வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.