மக்களுக்கு காலையிலேயே ஷாக்..!! மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்...!! தடாலடி உயர்வு..!!

 
Q
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளிடையே வர்த்தக பிரச்சனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில் கடல் வழி வணிகத்தில் சிக்கல் ஏற்படும் என பல்வேறு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. பொதுவாக போர் நடைபெற்றால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேர்ந்தெடுக்கும் நோக்கில், தங்கத்தின் மீது முதலீடு செய்வர்.
ஆனால் இப்போது போர் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் தொடங்கிய முதல் நாளில் தங்கம் விலை உச்சம் தொட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து வருகிறது.
கடந்த 5 நாள்களாக சரிவைக் கண்டு வந்த தங்கம், இன்று திடீரென உயர்ந்துள்ளது.
22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹15,050-க்கு விற்பனையாகிறது.
சவரன் ₹720 அதிகரித்து ₹120,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையானது மாற்றமின்றி ஒரு கிராம் ₹290-க்கு விற்பனையாகிறது.