ஷாக் நியூஸ் புதிய உச்சத்தில் சிலிண்டர் விலை...!!

 
Q

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட சமையில் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,071,50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,202க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏற்ப இந்த விலை மாறுபடும்.