தாராபுரத்தில் அதிர்ச்சி..!! அதிகாரிகள் இல்லாமல் செயல்படும் கட்டுப்பாட்டு அறை..!!
Oct 6, 2026, 10:41 IST1791263471752
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் காலை 7 மணி முதல் 320 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதனிடையே தாராபுரம் தொகுதியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பது அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

