கோவையில் அதிர்ச்சி..! சிறுவன் மீது ஏறி இறங்கிய பள்ளி வேன்..!

 
1

கோவை இருகூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது இரண்டு மகன்கள் சிங்காநல்லூரை அடுத்த போட் ஹவுட் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இதனிடையே மாணவர்கள் இருவரும் வழக்கம் போல பள்ளியில் இருந்து வேனில் வீடு திரும்பினர். அப்போது வேனில் இருந்து ஒரு சிறுவன் இறங்கிவிட, 1ம் வகுப்பு படிக்கும் சிறுவன் இறங்குவதற்கு முன்பாகவே வேன் டிரைவர் வண்டியை எடுத்துவிட்டார்.

இதில் வேனின் பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த சி.சி.டி.வி காட்சி வெளியான நிலையில், காவலர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் மீது பள்ளி வேன் ஏறிய சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.