மது பிரியர்களுக்கு ஷாக்..! டாஸ்மாக் கடை வெள்ளிக்கிழமை விடுமுறை..!

 
Q Q

மது பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமல்ல பார்களுக்கும் அரசு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் விடுமுறை விடப்படும்.

செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி அதாவது நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

அன்றைய தினம் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.