பிரபல நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!!

 
ttn

இந்தியாவில் கொரோனா  மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை  ஒரு லட்சத்து  70 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியுள்ளது.  குறிப்பாக தமிழகத்திலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.

Corona

 கொரோனா  மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் சூழலில் திரையுலகத்தை  சேர்ந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக வலிமை , ஆர் ஆர் ஆர் ஆகிய முக்கிய திரைப்படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.  அத்துடன் ஏராளமான திரை பிரபலங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நடிகர்கள் கமல் ஹாசன்,  விக்ரம், நடிகர் சத்யராஜ்ஆகியோருக்கு கொரோனா  ஏற்பட்ட நிலையில் நடிகர் அருண்விஜய் கடந்த வாரம் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார். அதேபோல நடிகை திரிஷா, ஷெரின் ஆகியோருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

tn

 இந்நிலையில் பிரபல நடிகையும் , பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.  2 டேஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்  அவருக்கு தற்போது பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிகிறது.   ஒமிக்ரான் ஒரு முடிவுக்கு வர வேண்டிக் கொள்கிறேன் என்று ஷோபனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் விரைவில் தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.