வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்குக! டிஜிபிக்கு சிவ்தாஸ் மீனா அறிவுரை

 
தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா

வாக்கு எண்ணிக்கை மையங்களில்  கூடுதல் பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர்  சிவ்தாஸ்மீனா அறிவுறுத்தியுள்ளார். 

4 நாட்கள் கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை | Tamil News  Shivdas Meena consult with district collectors for 4 days


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுகான வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் தமிழக டிஜிபி சங்கர்ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபி அருண், மகேஷ்குனார் அகர்வால், உள்ளிட்ட காவல்துறை ஆணையர்கள் கலந்துகொண்டர்.

அப்போது தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று சட்டம் ஒழுங்கு சீராக  இருக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், மோதல்கள் நடைபெறாமல் பார்த்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார்.