ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா திடீர் ராஜினாமா..!

 
11

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் முக்கிய அதிகாரிகளின் விலகல், தற்பொழுது தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவ்தாஸ் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.TNRERA தலைவர் சிவ்தாஸ் மீனா IAS மற்றும் உறுப்பினர்கள் சுப்பிரமணியம், சுகுமார் ஆகியோர் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். 


தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் இணைந்து ஆணையத்தின் முக்கிய உறுப்பினர்களான சுப்பிரமணியம் மற்றும் சுகுமார் ஆகியோரும் தங்களது பதவிகளை துறந்திருப்பது ரியல் எஸ்டேட் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சங்கர் ஜிவால், அபய் குமார் சிங், சுனில் குமார் போன்ற பல மூத்த உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து தங்களது பொறுப்புகளில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது சிவ்தாஸ் மீனா மற்றும் உறுப்பினர்களின் இந்த ஒட்டுமொத்த ராஜினாமா, ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நிர்வாகக் காரணங்கள் குறித்து பல்வேறு விவாதங்களையும் அடுத்தகட்ட பரபரப்பையும் உந்தித் தள்ளியுள்ளது.


யார் இந்த சிவதாஸ் மீனா..? 

கடந்த1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இவர் வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1989-ல் காஞ்சிபுரம் துணை ஆட்சியராக பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா, கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு சென்றார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், தமிழக பணிக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு நகராட்சி நிர்வாகத் துறை செயலராக இருந்த நிலையில், புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.