சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ப்பு

 
tn

ஆளுநர் குறித்து அவதூறாக பேசியதால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறினால் அவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்று பேசினார்.  இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி குறித்து அவதூறாகவும்,  மிரட்டல் விடும் தொனியிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்ன ராமசாமி போலீசில் புகார் அளித்தார்.

 இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி கட்டுப்பாட்டை மீறியும்,  கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்க நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

duraimurugan

இந்நிலையில் சென்னை வடக்கு மாவட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.